உள்ளூர் செய்திகள்

சேரன்மகாதேவி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

Published On 2022-12-21 14:51 IST   |   Update On 2022-12-21 14:51:00 IST
  • சேரன்மகாதேவி அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பு கிராமத்தில் லட்சுமி நாராயணசுவாமி கோவில் உள்ளது
  • உண்டியலை உடைத்த அவர்கள் அதில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்

நெல்லை:

சேரன்மகாதேவி அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பு கிராமத்தில் லட்சுமி நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைத்த அவர்கள் அதில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

இதேபோல் நேற்று நள்ளிரவில் அதே கிராமத்தில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில், பிள்ளையார்கோவில் உள்ளிட்ட கோவில்களின் உண்டியல்களும் உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்களில் திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News