உள்ளூர் செய்திகள்

புதுப்பேட்டை அரசு பள்ளியில் விளையாட்டு உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற அறையினை படத்தில் காணலாம்.

பண்ருட்டி அருகே அரசு பள்ளியில் திருட்டு

Published On 2023-09-26 14:49 IST   |   Update On 2023-09-26 14:49:00 IST
  • இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியர் அறைக்குள் சென்று பார்த்தனர்.
  • விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே புதுப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உள்ள விளையாட்டு உபகர ணங்கள் வைக்கப்பட்ட அறையின் பூட்டு உடைக் கப்பட்டு கதவு திறந்திருந்தது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியர் அறைக்குள் சென்று பார்த்தனர். அறை யில் இருந்த விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டி ருந்தது.

இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இரவு நேர காவலர் பணி யிடம் காலியாக உள்ளது. இதனால் இப்பள்ளி வளாகத்தில் இரவு நேரத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். இதனைத் தொடர்ந்தே பள்ளியில் உள்ள விளை யாட்டு உபகரங்கள் வைக்கும் அறையில் நேற்று இரவு திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். பள்ளியில் திருடிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News