உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்

Published On 2023-10-30 09:03 GMT   |   Update On 2023-10-30 09:03 GMT
  • டவுன் ரத வீதிகளில் சுற்றி தெரிந்த 6 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.
  • சாலைகளில் மாடுகளை திரியவிட்டால் அவற்றை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும்.

நெல்லை:

நெல்லை டவுன் ரத வீதிகளில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என அந்த பகுதிகளில் கடை வைத்திருக்கும் வியா பாரிகளும், பொது மக்க ளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்தனர்.

இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இள ங்கோ தலைமையில் இன்று மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்தனர்.

அந்த வகையில் டவுன் ரத வீதிகளில் சுற்றி தெரிந்த 6 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்பகுதியில் கட்டி வைத்தனர்.

இதே போல் தச்சை மண்ட லத்து க்குட்பட்ட வண்ணார் பேட்டை பஸ் நிறுத்தம் பகுதியிலும் சுற்றி திரிந்த மாடுகளை மாநக ராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

உரிய அபராதம் செலுத்தி விட்டு இன்று மாலைக்குள் அதன் உரிமையாளர்கள் மாடு களை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இனி மீண்டும் இதே போல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரியவிட்டால் மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News