உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. வாழப்பாடி அடுத்த பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோவில் அணையில் நீர் இருப்பு குறைந்து காணப்படுவதை படத்தில் காணலாம்.

வாழப்பாடி அருகே கரியக்கோவில் அணை நீர்மட்டம் சரிந்தது

Published On 2023-04-22 09:57 GMT   |   Update On 2023-04-22 09:57 GMT
  • பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
  • பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

வாழப்பாடி:

கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, பீமன்பாளையம், ஏழுபுளி, தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில், 3,600 ஏக்கர் நிலம் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகிறது.

கரியக்கோயில் ஆற்றில் பனைமடல், ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கொட்டவாடி கிராமங்களிலுள்ள தடுப்பணைகள் மற்றும் கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, ஏத்தாப்பூர். அபிநவம், புத்திரகவுண்டன்பாளையம் ஏரிகளில் இருந்து ஏறக்குறைய 3000 ஏக்கர் பழைய ஆயக்கட்டு பாசனம் பெறுகின்றன.

கடந்தாண்டு இறுாதியில் பெய்த பருவமழையால் அணையில், 49.98 அடி உயரத்தில் 171 மில்லியன கன அடி தண்ணீர் தேங்கியது. நிலத்தடி நீர்மட்டம் உயரவும், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு மற்றும் ஆறு மற்றும் ஏரிப் பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கரியக்கோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து மார்ச் மாதத்தில் 24 நாட்களுக்கு தலைமை மதகுகள் வழியாக வினாடிக்கு 40 கனஅடி வீதம் கரியக்கோயில் ஆற்றிலும், புதிய ஆயக்கட்டான அணை வாய்க்கால் பாசனத்திற்காக அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் வினாடிக்கு 15 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு சுழற்சி முறையிலும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் அணையின் நீர்மட்டம் செவ்வாயக்கிழமை நிலவரப்படி 27.52 அடியாக சரிந்து போனது. தற்போது அணையில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே எஞ்சியுள்ளது. கோடை தொடங்கிய நிலையிலேயே அணையின் நீர்மட்டம் சரிந்து போனதால், எதிர்வரும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கடும் வறட்சி நிலவும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வறட்சியை சமாளிக்க கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News