உள்ளூர் செய்திகள்

நெல்லை-தென்காசி சாலையில் வேனில் படிக்கட்டில் நின்று மாணவிகள் பயணம் செய்யும் காட்சி.

தென்காசியில் இருந்து நெல்லை கல்லூரிக்கு வேன் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவிகள்

Published On 2023-07-14 09:26 GMT   |   Update On 2023-07-14 09:26 GMT
  • சில பஸ்களில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள்.
  • வேனுக்குள் அளவுக்கு அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்வதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

நெல்லை:

நெல்லை பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர்.

இங்கு மாலை நேரத்தில் கல்லூரி முடிந்த பின்னர் அரசு பஸ்களில் ஏறுவதற்காக மாணவிகள் கூட்டம் அலைமோதும். அப்போது சில பஸ்களில் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வார்கள். இதை யடுத்து அங்கு போலீசார் நிறுத்தப்பட்டு பஸ்சுக்குள் ஏறி சென்று பயணிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பஸ்களில் கூட்டம் அதிக மாக இருப்பதாலும், குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாலும் தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் மாணவிகள் தனியார் வேன்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு மாணவிகளை ஏற்றி வரும் வேன்கள் மிகுந்த வேகத்து டன் வருவதாகவும், வேனுக்குள் அளவுக்கு அதிக சத்தமாக பாடல்களை ஒலிக்க செய்வதாகவும் சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் வேனுக்குள் போதிய இருக்கைகள் உள்ள போதிலும் மாணவி கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யாமல், படிக்கட்டுகளில் நின்று கொண்டும், பாடல்களுக்கு ஆடிக்கொண்டும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். எனவே மாணவிகளை ஏற்றி செல்லும் வாகன ங்களின் டிரைவர்கள், மாணவிகளை இருக்கையில் அமரச்செய்து கல்லூரிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News