எர்ர அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசன் தலைமையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
பொதுவெளியில் குப்பைகளை வீசுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்- எர்ர அள்ளி ஊராட்சி தலைவர் வேண்டுகோள்
- கழிவுநீர் கால்வாய் அமைத்தல்,குடிநீர் வசதி, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பொதுவெளியில் வீசுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த எர்ர அள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல்,குடிநீர் வசதி, கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் செந்தாமரை தமிழரசன் கூறும் போது, குப்பையில்லா கிராம பஞ்சாயத்தாக எர்ர அள்ளி பஞ்சாயத்தை உருவாக்க வேண்டும். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
குப்பைகளை தினமும் காலையில் வீடு, வீடாக வரும் தூய்மை பணியாளரிடம் வழங்க வேண்டும். அதை விடுத்து ஆங்காங்கே குப்பைகளை பொதுவெளியில் வீசுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் கலந்து கொண்டனர்.