உள்ளூர் செய்திகள்

காரில் வந்தவர் தவறவிட்ட தங்க நகையை  முதியவர் ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சி.

மாயமான நகையை மீட்டு கொடுத்த போலீசார்

Published On 2022-06-10 16:38 IST   |   Update On 2022-06-10 17:55:00 IST
  • பூ வாங்கி சென்றபோது தங்க நகையை தவறவிட்டனர்
  • துப்புரவு பணியாளர் ஒருவர் நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது

பண்ருட்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கரும்பூரை சேர்ந்தவர் சத்தியவாணி (வயது45)இவர். இவரது குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் பண்ருட்டி வந்தார். பண்ருட்டி 4 முனை சந்திப்பு காந்தி பூங்கா அருகில் காரை நிறுத்திவிட்டு பூ வாங்கிக்கொண்டு சென்றார். அப்போது அவரது தங்கநகையை தவறவிட்டார்.

சிறிது தூரம் சென்றபின் நகை தவறி விட்டது தெரியவந்தது.  இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் சுரேஷ் , அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராவில் காரில் வந்தவர் தவறவிட்ட தங்க நகையை  முதியவர் ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சி தெரிய வந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட போலீசார் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபரை தேட ஆரம்பித்தனர் . பண்ருட்டி நகராட்சியின் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆகிய இடங்களில் விசாரித்தனர். 

விசாரணையில் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர் நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக அவரை விசாரித்தனர். விசாரணையில் கீழே கிடந்ததால் எடுத்துச் சென்றதாக கூறிய அவர், அந்த நகையை போலீசாரிடம் கொடுத்தார். போலீசாரின் துரித நடவடிக்கையால் நகை மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். 

Tags:    

Similar News