உள்ளூர் செய்திகள்

சொந்த ஊருக்கு அனுப்ப கைதான ஆசிரியர்களை நள்ளிரவில் பரனூர் சுங்கச்சாவடிக்கு அழைத்து வந்த போலீசார்

Published On 2023-10-06 10:12 GMT   |   Update On 2023-10-06 10:12 GMT
  • பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
  • பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

செங்கல்பட்டு:

சமவேலைக்கு சம ஊதி யம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், முழுநேர ஆசிரியர் பணி மற்றும் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யக்கோரி டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தமிழகம் முழு வதும் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1600 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். திருமணமண்டபம் மற்றும் சமுதாயநலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்கள் அனை வரும் மொத்தமாக ஒரே இடத்திற்கு சென்றால் மீண்டும் போராட்டத்தில ஈடுபடலாம் என்பதால் போலீசார் முன்ஏற்பாடாக ஆசிரியர்கள் அனைவரையும் தனித்தனியாக பிரித்து பஸ்களில் அனுப்பி வைத்தனர்.

இதில் தனியார் பஸ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாடிக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

போலீஸ்சூப்பிரண்டு சாய்பிரனீத் மேற்பார்வை யில், டி.எஸ்.பி பரத் மற்றும் போலீசார் அங்கிருந்து ஆசிரி யர்களை தனித் தனியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனு ப்பி வைத்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News