உள்ளூர் செய்திகள்

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்

Published On 2023-03-11 08:21 GMT   |   Update On 2023-03-11 08:21 GMT
  • 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.
  • இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார்.

கடலூர்:

பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னை தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டது. இங்கு 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இது சம்மந்தமாக திருச்சி கருமண்டபம் சேர்ந்த ஜெரால்ட் (வயது 31) என்பவரின் மீது பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் நீதிமன்றத்தில் ஜெரால்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார்.

இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜசேகரன் மற்றும் தலைமை காவலர் பாபு ஆகிய தனிப்படையினர் திருச்சியில் தலைமறைவாக பதுங்கியிருந்த ஜெரால்ட்டை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News