உள்ளூர் செய்திகள்

பால் வியாபாரியை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-08-11 15:20 IST   |   Update On 2023-08-11 15:20:00 IST
  • அந்த வழியாக காரில் வந்த முனிராஜ், மொபட் மீது காரை வேகமாக மோதினார். இதில், சின்னபையன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
  • முனிராஜ் அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், சின்னபையன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே முத்துராயன் கொட்டாயை சேர்ந்தவர் சின்னபையன் (வயது45). பால் வியாபாரி. இவரது நண்பர் திப்பசந்திரத்தை சேர்ந்த முனிராஜ் (37). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

இந்த நிலையில், முனிராஜ் அடிக்கடி சின்னபையன் வீட்டுக்கு சென்று வந்ததால், சின்னபையனின் மனைவி முத்துமாரி (32) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சின்னபையன், முனிராஜிடம் பணமும், அவரது மனைவியிடம் நகைகளும் பெற்று அதனை திருப்பித்தர மறுத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால், முனிராஜ் ஆத்திரமடைந்து, சின்னபையனை பழிவாங்க முடிவு செய்தார். கடந்த 14-3-2018 அன்று இரவு சின்னபையன், ஒசஹள்ளி பகுதியில் மொபட்டில் சென்றார்.

அப்போது, அந்த வழியாக காரில் வந்த முனிராஜ், மொபட் மீது காரை வேகமாக மோதினார். இதில், சின்னபையன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அவரை, முனிராஜ் அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில், சின்னபையன் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தார்.

இது குறித்து தேன்கனி க்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனிராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று நீதிபதி ரோசலின் துரை முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோசலின் துரை, முனிராஜுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News