உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளியை கொல்ல முயன்றவர் கைது

Published On 2023-09-03 10:36 GMT   |   Update On 2023-09-03 10:36 GMT
  • சிறுமுகை சாலையில் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கினார்
  • மேட்டுப்பாளையம் போலீசார் ஏற்கெனவே 4 பேரை கைது செய்து இருந்தனர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் வெள்ளிப்பாளையம் ரோட்டை சேர்ந்த ராமு என்பவரது மகன் கந்தவேல் (30).கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் இரண்டாவது எதிரியாக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 26-ந் தேதி கந்தவேலுவை முன்விரோதம் காரணமாக சச்சின் என்ற நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் திலீப் (18), விபின் பிரசாத் (18),கவின் (18), மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

இதில் கந்தவேல் படுகாயம் அடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப், விபின் பிரசாத், சச்சின், நவீன்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். கவின் என்ற வாலிபர் தலைமறைவாக இருந்தார்.

அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். சிறுமுகை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தபோது போலீசாரிடம் அவர் சிக்கினார். 

Tags:    

Similar News