தமிழ்நாடு செய்திகள்
'உங்க கனவை சொல்லுங்க' புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
- அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்றே தொடங்கி வைக்கப்படும்.
- இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில் 'உங்க கனவை சொல்லுங்க' என்ற திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் அமைச்சர்களால் இன்றே தொடங்கி வைக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.