உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

களியக்காவிளை அருகே சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கத்தியால் குத்திய கணவர்

Published On 2022-12-23 14:01 IST   |   Update On 2022-12-23 14:01:00 IST
போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவு

கன்னியாகுமரி:

பளுகல் அருகே கருமானூர் பகுதியை சேர்ந்த வர் ராஜிவ் (வயது 37). கூலிவேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி ஷைனி. இவர்களுக்கு 10 வயதில் ஒருமகள் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கணவரை பிரிந்து கேரளா வில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடந்த 6 மாத காலமாக அங்கேயே தங்கி உள்ளார். நேற்று ஷைனி தனது உறவினரான கிறிஸ்டி என்பவரது இருசக்கர வாகனத்தில் கணவர் வீட்டில் நடக்கும் சுய உதவி குழுவில் பணம் வாங்குவதற்காக வந்துள்ளார்.

இதை அறிந்த ஷைனியின் கணவர் ராஜிவ் அங்கு சென்றார். ஷைனியை தன்னுடன் சேர்ந்து வாழ மறுக்கும் நீ இங்கு எதற்கு வந்தாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷைனியின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஷைனி வலி தாங்காமுடியாமல் அலறியுள்ளார். மேலும் படுகாயமடைந்த ஷைனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாறசாலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவ னந்த புரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து ஷைனியின் உறவினர் கிறிஸ்டி பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் அடிப்படையில் பளுகல் போலீசார் ராஜிவ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிர மாக தேடி வருகின்றனர். கணவரே மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News