உள்ளூர் செய்திகள்

இரா. முத்தரசன்

அரசு தரமான விதைகள், உரங்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் - இரா.முத்தரசன் பேட்டி

Published On 2022-06-27 09:29 GMT   |   Update On 2022-06-27 09:29 GMT
  • இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வதிகார ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது.
  • உற்பத்தி செலவினங்களை கணக்கீட்டு அதனை காட்டிலும் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பாபநாசம்:

பாபநாசத்தில் நடை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- இந்திய நாட்டில் மக்கள், ஜனநாய கத்திற்கு விரோதமாக, சர்வதிகாரத்துடன், பாசிச முறையில் ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. ஆகவே, மோடி அரசே வெளியேறு என்ற முழக்கத்தை முன் வைத்து, வரும் ஆக. மாதம் 6-ம் தேதி் முதல் 9-ம் தேதி வரை திருப்பூரில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில் சிபிஐ அகில இந்திய பொது செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மத்திய அரசான பாஜகவை இயக்கும் ஆர்எஸ்எஸ், இந்தியாவில் மதக்கலவரங்களை உருவாக்குகிறது. அக்னி பாதை என்ற திட்டத்தை கண்டித்து இளைஞர்கள் கொந்தளித்து போராடி வருகிறார்கள். இந்ததிட்ட த்தை ரத்து செய்ய வேண்டும். ராணுவ தளபதிகள், போராட்ட க்காரர்களுக்கு எதிராக பேட்டியளித்திருப்பது, வரலாற்றில் நடைபெறாத, நடக்ககூடாத சம்பவம். ராணுவத்தை தவறான பாதையில், மத்திய அரசு இட்டுச்செல்கிறது. இதனால் மக்களுக்கும், ராணுவத்திற்கும் மோதலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஜனநாயக்கிற்கு நல்லதல்ல.

நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை போதுமானதாக இல்லை. பாஜக தேர்தல் வா க்குறுதியில் அறிவித்ததின் படி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியினுடை.ய பரிந்துரை அடிப்படையில் விலையினை தீர்மானிக்க வேண்டும். உற்பத்தி செலவினங்களை கணக்கீட்டு, அதனை காட்டிலும் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு, தரமான விதைகள், உரங்களை தட்டுப்பாடின்றி கூட்டுறவுத்துறை மூலம் வழங்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து யஸ்வன்சின்ஹாவை வேட்பாளராக நிறுத்தியு ள்ளோம். இவர் வெற்றி பெறுவதின் மூலமாக நாட்டினுடைய இறையாண்மை காக்கப்படும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News