உள்ளூர் செய்திகள்

முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை- கலெக்டர் வழங்கினார்

Published On 2023-03-20 10:02 GMT   |   Update On 2023-03-20 10:02 GMT
  • 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
  • 11 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அவர் பேசியதாவது:

இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த 101-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 2012-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 301 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன .

342 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 11 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.எல்.ஏ, மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன், கல்லூரி செயலர் கணேசன், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குனர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் சிவா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News