உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் சாரண- சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சாரணர்கள் இயக்க அணிவகுப்பில் தஞ்சை பள்ளி முதலிடம்

Published On 2022-12-23 09:34 GMT   |   Update On 2022-12-23 09:34 GMT
  • அவர்–களுக்கான முழுமையான சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு.
  • தஞ்சை மாவட்டத்தில் சாரண, சாணியர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,டிச.23-

தஞ்சை தூய அந்தோணி யார் மேல்நிலைப்பள்ளி சாரண, சாரணியர் இயக்க அணிவகுப்பில் முதலிடம் பெற்றமைக்காக மேயர் சண்.ராமநாதன் கேடயம் வழங்கி பாரட்டி பேசினார்.

தஞ்சைதூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பள்ளிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சாரண சாரணியர் இயக்க தஞ்சை கல்வி மாவட்ட புரவரும், தஞ்சை மேயருமான சண்.ராமநாதன் கலந்து கொண்டு கேடயங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

தஞ்சை மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சாரணர், சாரணியர் படைகள் தொடங்கவும், அவர்களுக்கான முழுமையான சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்வதோடு, மாவட்ட அமைப்புக்கான அலுவலகமும் விரைவில் கட்டித்தரப்படும் என்றார்.

சாரண, சாரணியர் இயக்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை ஆணையரும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருமான சிவக்குமார் முன்னிலை வகித்து, சாரண, சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசுகையில்,

தஞ்சை மாவட்டத்தில் சாரண, சாணியர் இயக்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பாக உழைக்கும் மாவட்ட செயலர் சந்திர–மௌலி, மாவட்ட பயிற்சி ஆணையர் குழந்தைசாமி உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களையும் பாராட்டுவதாக கூறினார்.

நிகழ்ச்சியில் கவின் மிகு தஞ்சை இயக்க தலைவரும் மருத்துவருமான ராதிகா மைக் கேல் மாவட்ட சாரண ஆணையரும் மாவட்ட கல்வி அதிகாரியுான கோவிந்தராஜ், சாரணிய ஆணையர் கோமளவள்ளி, தூய அந்தோணியர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அல்போன்ஸ் வாழ்த்துரை வழங்கினார்.

மாவட்ட சாரண அமைப்பு ஆணையர் சாமிநாதன், வரவேற்றார். சாரணியர் அமைப்பு ஆணையர் ஜோசப் ஜெயந்தி நன்றி கூறினார். சாரண பயிற்சி ஆணையர் எழுத்தாளர் கவிஞர் குழந்தைசாமி நிகழ்ச்சியை தொகுத்தார்.

பல்வேறு பள்ளி சாரண, சாரணியர் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனார். மாவட்ட தலைமையிட சாரணிய ஆணையர் இந்துமதி உடனிருந்தார்.

ஏற்பாடுகளை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி உதவி சாரண ஆசிரியர்கள் சஞ்சை, ஜோஸ்வா தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.

முன்னதாக ஜாய்பிரின்ஸ் தலைமையிலான அணிவகுப்பு நடந்தது.

Tags:    

Similar News