உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 342 மி.மீ. மழை பதிவு

Published On 2023-07-11 15:39 IST   |   Update On 2023-07-11 15:39:00 IST
  • தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.
  • காலையிலிருந்து வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழை பொழிந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இருந்தாலும் அவ்வப்போது பலத்த காற்று வீசி வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. இரவிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. குறிப்பாக ஒரத்தநாடு தாலுகா வெட்டிக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கனமழை கொட்டியது.

மாவட்டத்தில் அதிகப ட்சமாக வெட்டிக்காட்டில் 48.40 மி.மீ மழை அளவு பதிவானது. மாவட்டத்தில் ஒரே நாளில் 342.70 மி.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

தஞ்சை உள்பட பல்வேறு இடங்களிலும் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் குறைந்து சாரல் மழை பொழிந்தது.

மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

வெட்டிக்காடு -48.40, நெய்வாசல் தென்பாதி -32, குருங்குளம் -31.60, மதுக்கூர் -28, பேராவூரணி -26.20, பட்டுக்கோட்டை -26, ஒரத்தநாடு -24.60, அதிராம்பட்டினம் -19.90, வல்லம் -14, தஞ்சாவூர் - 7.

Tags:    

Similar News