உள்ளூர் செய்திகள்

சிறுமி குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் போக்சோவில் கைது

Update: 2022-06-30 09:49 GMT
  • இளந்துறை கிராமத்தில் வசிக்கும் ஆதி என்பவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார்.
  • ஆதியை போக்சோ சட்டத்திலும், அவரது தந்தை பாலகிருஷ்ணனை மிரட்டல் விடுத்த வழக்கிலும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளந்துறை கிராமத்தில் வசிக்கும்ஆதி என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி குளிப்பதை செல்போனில் படம் பிடித்து அப்பகுதியில் உள்ள நபர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆதியின் தந்தை பாலகிருஷ்ணனிடம்(45) கூறி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். தனது மகன் அப்படித்தான் செய்வான் என பாலகிரு ஷ்ணன் கூறவே சிறுமியின் தந்தை திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

போலீசார்,் ஆதி மற்றும்பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி குளித்ததை ஆதி செல்போனில் படம் பிடித்தது உண்ைம என்பதும், அவரது தந்தை மிரட்டியதும் உண்மை என தெரியவந்தது.

இதை தொடர்ந்து ஆதியை போக்சோ சட்டத்திலும், அவரது தந்தை பாலகிருஷ்ணனை மிரட்டல் விடுத்த வழக்கிலும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News