உள்ளூர் செய்திகள்
- சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனர்
- கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
அரியலூர்:
உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாணத்திரையான் பட்டினம் முருகன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 1 கிலோ 900 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி தைலாகுளம் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக்(26) என்பதும், இப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்ததையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.