உள்ளூர் செய்திகள்

இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் தற்கொலை கணவர் கைது

Published On 2022-07-30 08:27 GMT   |   Update On 2022-07-30 08:27 GMT
  • இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
  • வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

கோவை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பிரதீபன் (வயது 33). பெயிண்டர். இவர் கடந்த 2006-ம் ஆண்டு இலங்கை அகதியாக வந்தார்.

அதே முகாமுக்கு பவித்ரா (27) என்பவரும் வந்தார். அப்போது இருவருக்கும் இடைேய பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்தினர். 3 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் பிரதீபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று பிரதீபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்ேபாது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபன் தனது மனைவி பவித்ராவிடம் நீ இறந்தால் தான், நான் நிம்மதியாக வாழ முடியும் என திட்டினார்.

இதனால் பவித்ரா மனவேதனையுடன் இருந்து வந்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ அடத்துக்கு வந்து பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பவித்ராவின் தந்தை நடராஜன் கோட்டூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீபனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News