கோவையில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
- மர்மநபர்கள் கண்காணிப்பு காமிராவின் எந்திரத்தையும் தூக்கி கொண்டு தப்பியோடி விட்டனர்.
- இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சூலூர்,
சூலூர் அருகே சுல்தான் பேட்டை அடுத்த பூரண்டாம்பாளையத்தில் டாஸ்மாக் மது கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடைக்கு நேற்றிரவு மர்மநபர்கள் சிலர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் அங்கு இருந்து 14 குவாட்டர் பாட்டில், 2 புல் மதுபாட்டில்களை திருடினர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவின் எந்திரத்தையும் தூக்கி கொண்டு தப்பியோடி விட்டனர்.
இன்று கடை திறக்க வந்தவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடையில் உள்ள பணம் அப்படியே இருக்கிறது, குவாட்டர் மற்றும் புல் பாட்டில்கள் மட்டுமே திருடுபோகிறது. இதனால் இந்த சம்பவத்தில் ஈடுபடுவது யார் என்பதை தேடி வருகின்றனர்.
இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.