தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 427 மி.மீ மழை அளவு
- 3 நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
- அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் தஞ்சையில் கனமழை கொட்டியது.
தஞ்சை அடுத்த திருவையாறில் கனமழை பெய்தது.
தொடர்ந்து இடைவிடாத பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
திருவையாறில் மட்டும் ஒரே நாளில் 70 மி.மீ. அளவுக்கு மழை கொட்டியது.
இதேபோல் வல்லம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், அய்யம்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யுமா? அல்லது அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-
திருவையாறு -70, திருக்காட்டுப்பள்ளி -55.40, பூதலூர் -53, அய்யம்பேட்டை -42, பாபநாசம்-32, தஞ்சாவூர் -25, வல்லம் -12.