உள்ளூர் செய்திகள்

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை ஆலோசனை கூட்டம்

Published On 2022-11-17 10:10 GMT   |   Update On 2022-11-17 10:10 GMT
  • மக்கள் படும் துன்பத்தை அரசுகளின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
  • ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நிறுவனர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார்.

அவைத்தலைவர் ஜெயபால், நகரதலைவர் நசீர், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகரசெயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாதாமாதம் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி கொண்டு போவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானங்களுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து அரிசி, பால் போன்றவற்றிற்கு வரியை குறைக்க செய்ய வேண்டும்.

சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டோர் ஒவ்வொருவரும் மக்கள் படும் துன்பத்தை அரசுகளின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டியது கடமை ஆகும்.

தஞ்சை வணிகர் சங்கபேரவையின் சார்பில் சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் முன்பு வரும் வருகிற 29-ம் தேதி தஞ்சையின் 52 வணிகர் சங்க வட்ட செயலாளர்களும் சென்று ஆர்ப்பாட்டம் செய்திடுவது.

இதற்கான ஏற்பாடுகளை செய்திட மாநிலநிர்வாகிகளை கேட்டு கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள்ஆத்மநாதன், சுந்தரமூர்த்தி, காசிநாதன், சபிக்முகமது, பிரகாஷ், துணைச் செயலாளர் சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரசெயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News