உள்ளூர் செய்திகள்
தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
கவர்னரை கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
- கவர்னரை கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- மார்க்சிஸ்டு மாநில செயலாளர் அமர்நாத், மக்கள் அதிகாரம் பாலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
சனாதனத்திற்கு எதிராக போராடிய வடலூர் வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று பேசிய தமிழக கவர்னர் ஆர்.என் ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் உணர்வார்கள் கூட்டமைப்பு சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ இள.புகழேந்தி, மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் குளோப், தி.க. மாவட்ட செயலாளர் எழிலேந்தி, மார்க்சிஸ்டு மாநில செயலாளர் அமர்நாத், மக்கள் அதிகாரம் பாலு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.