உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே திருமணம் நின்றதால் வாலிபர் தற்கொலை

Published On 2023-06-06 09:53 IST   |   Update On 2023-06-06 09:53:00 IST
  • மனமுடைந்த பூபாலன் கடந்த 3-ந்தேதி இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
  • பூபாலனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னசேலம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். விவசாயம் செய்து வருகிறார்.

இவருடைய 2-வது மகன் பூபாலன் (வயது 31). இவருக்கும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சேத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் வரை சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் திடீரென திருமணம் நின்று போனது.

இதனால் பூபாலன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த பூபாலன் கடந்த 3-ந்தேதி இரவு அதிக அளவில் மது அருந்தி விட்டு தொட்டியம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 11 மணி அளவில் பூபாலன் அதிக அளவில் வாந்தி எடுத்துள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் இதற்கான காரணத்தை கேட்டுள்ளனர்.

உடனே பூபாலன் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூபாலன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பூபாலனின் தந்தை ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News