உள்ளூர் செய்திகள்

சட்டசபையில் மீண்டும் நிறைவேறிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தருவாரா?

Published On 2023-11-18 15:21 IST   |   Update On 2023-11-18 15:21:00 IST
  • மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.
  • சட்ட சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானமாக கொண்டு வந்து இவற்றை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேறி உள்ளது.

இந்த மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.

ஏனென்றால் இந்த மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பிய போது காரணம் எதுவும் தெரிவிக்காமல்தான் அனுப்பி உள்ளார். இதுகுறித்து சட்டத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இவ்வாறு சட்ட சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானமாக கொண்டு வந்து இவற்றை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சபையில் ஒருமனதான முடிவுடன் இந்த 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்படுவதால் இதில் சட்ட சிக்கல் வர வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம் என்று விளக்கம் தெரிவித்தனர்.

Tags:    

Similar News