வெள்ளோடு அருகே வேன் மோதி பள்ளி மாணவன் பலி
- காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி.
- அனுமன்பள்ளியிலிருந்து வெள்ளோடு நோக்கி சென்ற ஒரு பிக்கப் வேன் விமலேஷ் மீது மோதியது.
சென்னிமலை:
காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவருடைய மகன் விமலேஷ் (வயது 7). இவன் அனுமன்பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாணவன் விமலேஷ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு அரசு டவுன் பஸ்ஸில் வீடு திரும்பினான். அப்போது வெள்ளோடு - அனுமன்பள்ளி ரோட்டில் காரைவாய்க்கால் என்ற இடத்தில் பஸ்ஸை விட்டு இறங்கி ரோட்டை கடக்கும் போது
அனுமன்பள்ளியிலிருந்து வெள்ளோடு நோக்கி சென்ற ஒரு பிக்கப் வேன் விமலேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விமலேஷை உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் விமலேஷ் பரிதாபமாக இறந்து விட்டான். இதுகுறித்து வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உத்ராஜ் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கவுந்தப்பாடியை சேர்ந்த வேர் டிரைவர் தருண்குமாரை என்பவரை கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். விபத்து நடந்த இடத்தில் பள்ளி குழந்தைகள் ரோட்டை கடந்து போவது தெரிந்தும் வேன் டிரைவர் தருண்குமார் வேகமாக வேனை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.