உள்ளூர் செய்திகள்
வண்டலூர் அருகே கார் மோதி வாலிபர் பலி
- விழுப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது34). வண்டலூர் வெளிவட்டசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- வண்டலூர் அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
வண்டலூர்:
விழுப்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது34). இவர் மண்ணிவாக்கம் அருகே வண்டலூர் வெளிவட்டசாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபாகரன் பலியானார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.