காஞ்சிபுரம் அருகே நள்ளிரவில் மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து
- மின்மாற்றி அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
- தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்னயங்குளம் பகுதியில் மின்மாற்றியில் பிற்பகலில் லேசான பழுது ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மின் மாற்றியில் தீ பொறி ஏற்பட்டுள்ளது அப்போது பொதுமக்கள் மின்சாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் ஆனால் மின்சாரதுறை அதிகாரிகள் யாரும் இந்த சம்பவம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றி தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறியது. மின்மாற்றி அருகே குடியிருப்புகளில் இருந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியேறி ஓட்டம்பிடித்தனர்.
உடனே காஞ்சிபுரம் தீயணைப்புதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரியபடுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த 5 தீயனைப்புதுறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த காயமும் இல்லாமல் உயிர் தப்பினர். மின்சாரதுறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கான காரணம் என இப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.