உள்ளூர் செய்திகள்

திருக்கழுகுன்றம் அருகே கோயில் திருவிழாவில் பட்டாக்கத்தி வைத்து பக்தர்களை மிரட்டிய வாலிபருக்கு சிறை

Update: 2022-06-28 11:28 GMT
பொது மக்களை மிரட்டியதாக அவர் மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் திவ்யராஜ் வயது.22, இவர் திருக்கழுகுன்றம் அடுத்த அமிஞ்சகரை கோயில் திருவிழாவில் கையில் பட்டாக்கத்தி ஒன்றை வைத்துக் கொண்டு பக்தர்களை மிரட்டியுள்ளார்.

தகவலரிந்த திருக்கழுகுன்றம் போலீசார் திவ்யராஜை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்த போது போலீசாரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது., பொது இடத்தில் பட்டாக்கத்தி வைத்து பொது மக்களை மிரட்டியதாக அவர் மீது திருக்கழுகுன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News