உள்ளூர் செய்திகள்

கோவில் விழாவில் ஒலிப்பெருக்கியில் பாட்டு போடுவதில் தகராறு: இருதரப்பினரிடையே மோதல்-11 பேர் கைது

Published On 2023-07-31 09:34 GMT   |   Update On 2023-07-31 09:34 GMT
  • மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.
  • கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பொன்மலை நகரைச் சேர்ந்தவர் சரண் (வயது22). கூலித்தொழிலாளி.

ஜெகதேவி எம்.ஜி.ஆர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது அந்த கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவை பார்ப்பதற்காக சரண் நேற்று கோவிலுக்கு வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23), ஆனந்த் (20), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் திருவிழாவிற்கு வந்தனர்.

அப்போது 3 பேரும் சேர்ந்து சரணிடம் ஒலிபெருக்கியில் சினிமா பாடல் போடுமாறு கூறியுள்ளனர்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து சரணை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனை பார்த்த சரண் தரப்பினரைச் சேர்ந்த நவீன்குமார் (24), வேலாயுதம் (24), சந்தோஷ் குமார் (25), சூர்யா (21), பத்மநாபன் (21), ரவி, சந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 8 பேரும் சேர்ந்து மணிகண்டன் தரப்பினரை திருப்பி தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போர்களமாக காட்சியளித்தது.

இதுகுறித்து சரண் பர்கூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், ஆனந்த், 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதேபோன்று மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் உள்பட 8 பேரையும் கைது செய்தனர்.

கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 11 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News