உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் பலி
- செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி.
- குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 16), இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.
நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் செல்லும் போது திடீரென சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தான். அக்கம் பக்கத்தினர் பாலாஜியை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.