உள்ளூர் செய்திகள்
மதுரவாயல் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் பணம்-செல்போன் பறிப்பு
- 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென அன்புசெழியனை வழி மறித்து மிரட்டினர்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரவாயல்:
மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்புசெழியன். தனியார் கியாஸ் கம்பெனியில் சூப்பர்வைசராக உள்ளார். இவர் இரவு பணி முடிந்து அதிகாலை 3மணி அளவில் மோட்டார் சைக்கிளில் அடையாளம்பட்டு சர்வீஸ் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென அன்புசெழியனை வழி மறித்து மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.