உள்ளூர் செய்திகள்

இது ரத்த உறவு... பிரேமலதா

Published On 2022-08-27 10:49 GMT   |   Update On 2022-08-27 10:49 GMT
  • பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
  • தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா பங்கேற்று பேசியபோது தொண்டர்களுக்கும் கேப்டனுக்கும் இடையேயான உறவு ரத்த உறவு என்றும், இதனை யாராலும் பிரிக்க முடியாது என்றும், பெருமை பொங்க குறிப்பிட்டார்.

பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். அப்போது அவர்களிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார். இங்கு ரத்த தானம் செய்த தே.மு.தி.க. தொண்டர்கள் பலரது ரத்தவகை ஓ பாசிட்டிவாகவும், பி. பாசிட்டிவாகவும் இருக்கு. கேப்டனின் ரத்த வகை ஓ பாசிட்டிவ். எனது ரத்த வகை பி. பாசிட்டிவ் இப்படி நாம் ஒரே ரத்தத்தை சேர்ந்தவர்கள். இது ரத்தத்தில் கலந்த உறவு. யாராலும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

பிரேமலதாவின் இந்த "ரத்த பாச பேச்சு" கட்சி தொண்டர்களுக்கு பூஸ்டாக மாறி இருப்பது என்னவோ உண்மைதான். அது கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்சுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News