உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் கடையில் நூதன முறையில் நகை திருடிய இளம்பெண்

Published On 2023-03-03 23:54 IST   |   Update On 2023-03-03 23:54:00 IST
  • பொன்னேரியில் நகை கடையில் 33 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் நூதன முறையில் நகையை திருடிச் சென்றார்.
  • கடை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரியில், ஹரிஹரன் பஜார் தெருவில் பிரபல நகை கடை ஒன்று உள்ளது. அந்த கடையை ராகவன் (வயது 24) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் 33 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தங்க செயின் வாங்க வந்ததாக கூறினார். கடை ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு தங்க செயின் மாடல்களை எடுத்து காண்பித்துக்கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக நகையை தேர்வு செய்வது போல் நடித்து கடை ஊழியர் கவனத்தை திசைதிருப்பி ஒரு தங்க சங்கிலியை எடுத்து மடியில் போட்டு விட்டு பின்னர் எனக்கு நகை பிடிக்க வில்லை என கூறி திருடிய நகையுடன் தப்பிச் சென்றார்.

பின்னர் ஊழியர்கள் நகைகளை சரி பார்க்கும் போது 26 கிராம் தங்க சங்கிலி காணவில்லை. இதுகுறித்து ராகவன் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News