மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் செலவில் உள் நோயாளிகள் தங்குவதற்கு புதிய கட்டிடம்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பூஞ்சேரியில் 2008ல் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 20 படுக்கைகள் மட்டுமே உள்ளது. நோயாளிகள் தற்போது அதிகரிப்பதால் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற கூடுதல் கட்டிடம் தேவைப்பட்டது.
இதையடுத்து உள்நோயாளிகள் மற்றும் உடன் இருப்போர் என 80பேர் தங்கும் வகையில், சுத்திகரிப்பு குடிநீர், காற்றோட்டம், சி.சி.டி.வி கேமராக்கள் போன்ற நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. 1கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.
புதிய கட்டிடம் கட்டும் பகுதி பாறை, சரிவு மண் அடங்கிய நிலம் என்பதால் மண்ணின் தரம், தண்ணீர் மற்றும் பூமிக்குள் பாறை இருக்கும் அளவு, இவைகளை பரிசோதனை செய்ய மதுரையில் இருந்து அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் 5பேர் மாமல்லபுரம் வந்துள்ளனர். இவர்கள் கட்டுமானம் நடைபெறும் பகுதியில் "பைலிங்" மிஷின் உதவியுடன் மண் பரிசோதனை செய்து வருகின்றனர்.