உள்ளூர் செய்திகள்
மினி பஸ் மோதியதில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்கம்பம்.

தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மீது மோதிய மினிபஸ்: சிறுவன் படுகாயம்

Published On 2023-03-31 09:11 GMT   |   Update On 2023-03-31 09:11 GMT
  • ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிக்கொண்டே சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது.
  • சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தார்.

தஞ்சாவூர்:

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று மதியம் தனியார் மினி பஸ் மருத்துவ கல்லூரிக்கு புறப்பட்டது. இந்த பஸ்ஸில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த மினி பஸ் மருத்துவ கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதிக்கொண்டே சென்று மின்கம்பத்தில் மோதி நின்றது.

இதில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின்கம்பம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தார். இது தவிர சிலர் லேசான காயமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News