உள்ளூர் செய்திகள்
மதுராந்தகம் அருகே தபால் நிலையத்தில் பூட்டை உடைத்து கொள்ளை
- பீரோவில் இருந்த ரூ. 55 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
- பால் கொள்முதல் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்று உள்ளனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அருகே உள்ள வேலூர் கிராமத்தில் கிளை தபால் நிலையம் உள்ளது. நேற்று மாலை வழக்கம்போல் பணி செய்து விட்டு தபால் நிலையத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இன்று காலை அவ்வழியே பொதுமக்கள் சென்றபோது தபால் நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தபால் நிலைய அதிகாரி ஜெயப்பிரியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 55 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதேபோல் அருகே உள்ள பால் கொள்முதல் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்று உள்ளனர். இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.