உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உதவி உபகரணங்களை வழங்கினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி- அமைச்சர் மூர்த்தி

Published On 2023-05-18 07:44 GMT   |   Update On 2023-05-18 07:44 GMT
  • ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
  • ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்.

மதுரை:

மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 2312 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 923 மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு முதல் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த பிரச்சினைகள் வந்த போது அதற்கு தீர்வு கண்டவர் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி.

இந்த வெற்றி தமிழர்களின் உணர்வுக்கும், பண்பாட்டு கலாச்சாரத்திற்கும் கிடைத்தது. இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஸ் சேகர், கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், சேர்மன் வீரராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News