உள்ளூர் செய்திகள்
மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு
- மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கண்ணதாசன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி.
- நாகலட்சுமி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கண்ணதாசன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 60), இவர் தனது பேத்தியை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக மறைமலைநகர் கம்பர் தெரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகலட்சுமி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து நாகலட்சுமி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.