உள்ளூர் செய்திகள்

திருட்டுத்தனமாக மது விற்ற 63 பேர் கைது

Published On 2023-05-29 12:00 GMT   |   Update On 2023-05-29 12:01 GMT
  • போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக மதுவிலக்கு மற்றும் காவல் துறையினர் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளில் சாராயம் தயாரித்து வைத்திருந்ததை அழித்தும் அவர்கள் கைது செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் வடக்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் பகலவன் உத்தரவின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக மது விற்போரை கைது செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 33 ஆண்கள், 30 பெண்கள் என 63 நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 831 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டள்ளது.

Tags:    

Similar News