உள்ளூர் செய்திகள்

மனைவியின் கள்ளக்காதலனை ஆட்டோ ஏற்றி கொல்ல முயன்ற வாலிபர்

Published On 2023-07-07 11:24 IST   |   Update On 2023-07-07 11:24:00 IST
  • படுகாயமடைந்த சிவா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
  • போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துபட்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 32). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி பிரியா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களது வீட்டுக்கு உறவினரான சிவா அடிக்கடி வந்து சென்றார். அப்போது சிவாவுக்கும், பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.

இது குறித்து முருகானந்தத்துக்கு தெரியவரவே அவர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் தான் இல்லாத நேரத்தில் சிவா வீட்டுக்கு வந்து சென்றது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் தமுத்துபட்டியில் இருந்து வெள்ளைய கவுண்டனூருக்கு ஆட்டோவில் சென்ற போது எதிரே வந்த சிவா மீது மோதினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவா திடீரென சுதாரித்துக் கொண்டு விலகியதால் உயிர் தப்பினார்.

அப்போதும் ஆத்திரம் அடங்காத முருகானந்தம் தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு சிவாவின் வீட்டுக்கு சென்று உருட்டுக் கட்டையால் பயங்கரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சிவா திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த தாக்குதலில் முருகானந்தத்துக்கும் காயம் ஏற்பட்டதால் அவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News