உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-20 16:36 IST   |   Update On 2022-09-20 16:36:00 IST
  • மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் 450 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது.
  • சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு அடிப்படையில் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

செங்கப்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரவம்பாக்கம் பகுதியில் 450 ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாகவும், இதனை மீட்க கோரியும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

அதன் பின்னர் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு அடிப்படையில் நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் வருவாய்த்துறை நிர்வாகம் நிலத்தை மீட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்த 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பஞ்சமி நிலத்தை மீட்க கோரி மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்திடம் மனு அளித்து சென்றனர்.

Similar News