உள்ளூர் செய்திகள்

கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் தண்ணீர் குவளையுடன் மனு அளிக்க வந்தவரால் பரபரப்பு

Published On 2023-06-05 13:01 IST   |   Update On 2023-06-05 13:01:00 IST
  • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்ற வருகின்றது.
  • கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த அமரேசன் கையில் தண்ணீர் குவளையுடன் மனு அளித்தார்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்ற வருகின்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க நேரில் வந்தனர். அப்போது வேப்பூர் வட்டம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன். இவர் டிசம்பர்-3 இயக்க மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த அமரேசன் கையில் தண்ணீர் குவளையுடன் நூதன முறையில் மனு அளித்தார்.

வலசை கிராமத்தில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ஆலை அமைத்து பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

மேலும் எனது ஊரில் கிட்னி பிரச்சினையால் பலர் உயிரிழந்துள்ளனர். அதனை தடுக்கும் வகையில் பல லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டும் இயங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் மூலம் பொதுமக்களின் உடல்நிலை பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தடுக்கப்படும். ஆகையால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கு வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News