உள்ளூர் செய்திகள்
பூந்தமல்லி அருகே அரசு பள்ளியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு
- மாணவர்களின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார்.
- மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை எப்படி உள்ளது என ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அப்போது பூந்தமல்லி பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்மனம்பேடு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாணவர்களின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டு கேட்டறிந்தார். பின்னர் மாணவர்கள் சேர்க்கை மற்றும் வருகை எப்படி உள்ளது என ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவர்களிடம் தூய்மையாக இருக்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் வழங்கினார்.