உள்ளூர் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பிளஸ்-1 மாணவனை சிறைவைத்து பணம் கேட்டு மிரட்டல்: 3 பேர் கைது
- மாணவன பணம் இல்லை என்று கூறியதும் அவனை மிரட்டி அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று சிறைவைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து முள்ளு தினேஷ், முகேஷ்,சச்சின் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவன் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முள்ளு தினேஷ், முகேஷ்,சச்சின் ஆகியோர் மாணவரை நிறுத்தி பணம் கேட்டு மிரட்டினர். மாணவன பணம் இல்லை என்று கூறியதும் அவனை மிரட்டி அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று சிறைவைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தான். அவன் வாலிபர்கள் பணம்கேட்டு மிரட்டியது குறித்து தந்தையிடம் தெரிவித்தார். இதுகுறித்து மாணவரின் தந்தை செங்கல்பட்டு தாலுக்கா போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து முள்ளு தினேஷ், முகேஷ்,சச்சின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.