உள்ளூர் செய்திகள்

ஆவடி அருகே இன்று காலை அரசு மினிபஸ் மோதி 1½ வயது குழந்தை பலி

Published On 2023-03-13 14:48 IST   |   Update On 2023-03-13 14:48:00 IST
  • சிறுவன் யுவா திடீரென தனியாக சாலையை கடக்க முயன்றான்.
  • ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநின்றவூர்:

ஆவடி அருகே ஆயில் சேரி பகுதியில் செங்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கு காசி மணி என்பவர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது 1½ வயது மகன் யுவா.

இந்த நிலையில் இன்று காலை செங்கல் தொழிற் சாலையில் வேலைபார்த்து வரும் உறவினர் ஒருவர் சிறுவன் யுவாவை அழைத்துக் கொண்டு அருகில் கண்ணன் பாளையம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது சிறுவன் யுவா திடீரென தனியாக சாலையை கடக்க முயன்றான். அந்த நேரத்தில் ஆவடியில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு மினிபஸ் (எண் எஸ்50) குழந்தை யுவா மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News