உள்ளூர் செய்திகள்

நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பு- கடலூர் மாவட்டத்தில் 5 நாளில் 70 பேருக்கு கொரோனா

Published On 2022-07-06 04:05 GMT   |   Update On 2022-07-06 04:05 GMT
  • கடலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • என்றாலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடலூர்:

தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் தலைதூக்கி உள்ளது. இதனால் சென்னை மாநாகராட்சி சார்பில் முக கவசம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

அதன்படி மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 1-ந் தேதி 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களோடு சேர்த்து 43 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வறுகிறார்கள். கடந்த 3-ந் தேதி 13 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.

எனவே கொரோனா பாதிப்பு 56 ஆக உயர்ந்தது. 4-ந் தேதி 15 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11 என நாளுக்குநாள் அதிகரிக்க தொடங்கியது. நேற்று மட்டும் (5-ந் தேதி) ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 85 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலையொட்டி மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த பகுதியில் கொரோனா பரவுகிறது என கணக்கெடுத்து வருகிறார்கள். அந்த இடங்களை கண்டறிந்து சுகாதார பணிகள் நடந்து வருகிறது. மேலும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News