உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நல சங்க தலைவராக ஐ.கே.எஸ்.நாராயணன் 3-வது முறையாக பதவி ஏற்பு

Published On 2023-07-07 15:58 IST   |   Update On 2023-07-07 15:58:00 IST
  • சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினார்கள்.
  • சிறப்பு விருந்தினர்களாக தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் கலந்து கொண்டார்.

சென்னை:

தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்க முப்பெரும் விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது.

சங்கத்தின் பொதுக்குழு புதிய நிர்வாகிகள், பொறுப்பேற்றல், தலைநகர் ஐ.கே.எஸ். நாராயணனின் 60-ம் ஆண்டு மணிவிழா எவரெஸ்ட் சிகரம் தொட்ட முத் தமிழ் பெண் என்.முத்தமிழ் செல்விக்கு பாராட்டு விழா ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் சங்கத் தலைவராக 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.கே.எஸ். நாராயணன், செயலாளர், எம்.சாமிநாதன், பொருளாளர், எக்ஸ்பிரஸ் எல்லப்பன் ஆகியோரை சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார், மணல் லாரி சங்கத் தலைவர் செல்லா ராசா மணி, லாரி சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ், தொழில் அதிபர் ஆர்.ஜெயராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

Tags:    

Similar News