உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-28 09:21 GMT   |   Update On 2022-12-28 09:21 GMT
  • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தினைவழங்க வேண்டும்.
  • மென்பொருள் திட்டத்தை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்திணை ரத்து செய்து, அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஓய்வூதியத்தினைவழங்கிட வேண்டும்.

மறுக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பை உடன் வழங்கிட வேண்டும். மாநகராட்சி நகராட்சியில் நிரந்தர பணியிடங்களை அளித்திடும் அரசாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தினை, சத்துணவு ஊழியர்களைக் கொண்டு முழுமையாக அமுல்படுத்தி விட வேண்டும்.

அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட் சோரிங் முறைகளை ரத்து செய்து, காலம் முறை ஊதியத்தை உடனடியாக காலியிடங்களை நிரப்பிட வேண்டும்.ஏ மற்றும் பி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும்பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம் ஆர் பி செவிலியர்கள், நூலகர்கள், உள்ளிட்டு தொகுப்பூதியம், சிறப்பு காலம் முறை ஊதியம் பெறும் ஊழியர்களை, நிரந்தரப்படுத்தி காலம் முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் வழங்கிட வேண்டும்.

கருவூலம் உள்ளிட்ட அரசுத் துறையில் பயன்படுத்தப்படும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பது கைவிட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட த்தில் தமிழ்நாடு அரசு உயர் சங்கத்தின், நன்னிலம் வட்டக்கிளை நிர்வாகிகள், மற்றும்மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News